(ஏறாவூர் உமர் அறபாத்)
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் சந்திவெளி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்துச்சம்பவத்தில் இருவர் மரணமடைந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேளையிலே இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகம்மது இப்ராகிம் முகம்மது ஹுசைன் (54) மற்றும்
04 வயதுடைய முகம்மது நுபைல் ஹிபா செரீன் என்ற சிறுமியும் இவ்விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை நிலவிய இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK