கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் இன்று நீதிமன்றுக்கு - FLASH NEWS - TAMIL

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் இன்று நீதிமன்றுக்கு

 


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 


இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதூஷிடம்' நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. 

இது குறித்த விசாரணைகளின் பின்னணியிலேயே முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சரின் குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. 

கைது செய்யப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

AZEEM MOHAMMED

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்