சிரமங்களைக் குறைத்து ஒத்திகை நடைபெறுகிறது - FLASH NEWS - TAMIL

சிரமங்களைக் குறைத்து ஒத்திகை நடைபெறுகிறது

 பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின விழா ஒத்திகையை நடாத்துவதாகப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த தெரிவித்தார். 



இம்முறை சுதந்திர தின விழாவிற்காக 1,873 படை வீரர்கள் பங்குபற்றுவதுடன், கடந்த தடவை நடைபெற்ற சுதந்திர தின விழா மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும் 40% வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் 77ஆவது சுதந்திர தின வைபவம் தொடர்பாக இன்று (30) இடம்பெற்ற விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் இதனை வெளியிட்டார். 

இம்முறை விமானப்படையின் விமானங்கள் 03 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே, இம்முறை யுத்த வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறவில்லை என்றும், கடற்படையினால் நண்பகல் 12.00 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கடலின் மத்தியில் கப்பலொன்றிலிருந்து மரியாதை வேட்டுக்கள் 25 தடவை வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட அன்றைய தினத்திற்கு அவசியமான பாதுகாப்புத் தொடர்பாக மற்றும் போக்குவரத்து வாகனங்கள் செல்லும் விதம் என்பன குறித்துத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

News Editor-2

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்