"ரணிலை அறிந்து கொள்வோம்" முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம் - FLASH NEWS - TAMIL

"ரணிலை அறிந்து கொள்வோம்" முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பிரச்சார நிகழ்ச்சி ஆரம்பம்

 


சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்  நாளை (07) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.


09 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளுராட்சி  மன்றங்கள், 4984  வட்டாரங்கள், 14026  கி.உ. பிரிவுகள் மற்றும் 53 896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் பாத்திரத்தை  மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின்  உள்ளடக்கம் அடங்கிய  துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன் கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.


மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை எதிர்கொள்ளாத வகையில்  பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் கௌரவமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஊடகப் பிரிவு

Ranil 2024-இயலும் இலங்கை


News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்