91 சிறார்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; 1,600 குற்றச்சாட்டுகள்! - FLASH NEWS - TAMIL

91 சிறார்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்; 1,600 குற்றச்சாட்டுகள்!


அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் , 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அதனை படம்பிடித்தார் என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் மீது தொடர்பாக நீதிமன்றத்தில் 1,600 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 15 வருடங்களுக்கும் மேலாக, இளம் சிறுமிகளை இந்நபர் துஷ்பிரயோகப்படுத்தினார் என பொலிஸார் கூறுகின்றனர்.45 வயதான இந்நபர், 2022 ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார் எனினும், பொலிஸார் விசாரணை நடத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஒரு வருடகாலம் சென்றுள்ளது.

சந்தேகநபர் மீது 246 பாலியல் வல்லுறவு குற்றச்சாட்களும் சிறார்களுடன் அநகாகரீகமான நடத்தை தொடர்பில் 673 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சிறார்கள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட காட்சிகளை படம்பிடித்தமை, விநியோகத்தமை தொடர்பிலும் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சுமார் 4,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தாம் கண்ட பயங்கரமான வழக்குகளில் ஒன்று இது என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்