பேருந்தின் மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு காத்திருந்த ஆபத்து - FLASH NEWS - TAMIL

பேருந்தின் மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு காத்திருந்த ஆபத்து


 எல்பிட்டிய-பிட்டுவல பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதிப்பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவிற்கு அருகில் வேகமாக வந்துள்ளது

பஸ் மிதிபலகையில் பயணம் செய்த குறித்த பாடசாலை மாணவன் திடீரென தரையில் விழுந்ததோடு, பஸ் முன்னோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தில் சிறுவனின் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

Faz

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்