பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். - FLASH NEWS - TAMIL

பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், இன்று (09) பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து முக்கிய  பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

இங்கு சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை பாகிஸ்தான் நாட்டின் பிரதி உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார்.

அத்துடன், விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  சந்தித்து  கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டது.









BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்