ஏழைகளின் துயர் துடைக்க முன்வந்த YWMA: வருடாந்த ஜகாத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கல் - FLASH NEWS - TAMIL


ஏழைகளின் துயர் துடைக்க முன்வந்த YWMA: வருடாந்த ஜகாத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் (YWMA) வருடாந்த ஜகாத் திட்டத்தின் கீழ், எமது சமூகத்தின் தேவையுடையோரின் நலன் கருதி நலத்திட்ட உதவிகள் இன்று (07) வழங்கி வைக்கப்பட்டன.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொதிகள் பண உதவிகள் துவாலைகள் (Towels) பகிர்ந்தளிக்கப்பட்டன இந்த மனிதாபிமான உதவி வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் திருமதி. ஹலீதா ஷைதீன் திருமதி. மசாஹிரா ஜாபிர் திரு. பாரூக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முறையான நடைமுறைகளின் கீழ் இந்த உதவிகள் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டன. YWMA அமைப்பின் இந்தத் தொடர்ச்சியான சமூகப் பணிகளைப் பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிகழ்வில் இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி  தேசமான்ய பவாஸா தாஹா உட்பட  சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.






















































No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.