'இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்' திட்டத்திற்கு WAMY அமைப்பு நிதி உதவி: சவுதியில் காசோலை கையளிப்பு! - FLASH NEWS - TAMIL


'இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்' திட்டத்திற்கு WAMY அமைப்பு நிதி உதவி: சவுதியில் காசோலை கையளிப்பு!


இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்' (Rebuilding Sri Lanka)திட்டத்திற்காக WAMY அமைப்பு SAR 100,000 (USD 26,000) வழங்கியது.

சவுதி அரேபியாவின் ரியாதில் அமைந்துள்ள இளைஞர் வலுவூட்டல்அமைப்பான உலக முஸ்லிம் இளைஞர் பேரவை (WAMY), 2025டிசம்பரில் இலங்கையின் சில பகுதிகளை கடுமையாக பாதித்த திட்வாசூறாவளிக்குப் பின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவி செய்யும்வகையில் இலங்கை அரசாங்கம் தொடங்கிய 'இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்' (Rebuilding Sri Lanka) திட்டத்திற்கு சவுதி ரியால்100,000 (அமெரிக்க டொலர் 26,000) நிதி உதவியை வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ரியாதிலுள்ள WAMY தலைமையகத்துக்கு சென்று, அவ்வமைப்பின்பொதுச் செயலாளர் Dr.சாலிஹ் பின் இப்ராஹிம் பாபேர் அவர்களைசந்தித்து, ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்வைத்தவேண்டுகோளுக்குப் பதிலளித்து இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டஇந்த தாராள நிதி உதவிக்கு தனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்தார். 

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் WAMY அமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதைவும் தூதுவர் அஜ்வத்பாராட்டினார். இந்நடவடிக்கைகள் சமூக நலனையும் பாதிக்கப்படும்சமூகங்களின் முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதாக அவர்குறிப்பிட்டார்.  

1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட WAMY அமைப்பு, ஐந்துதசாப்தங்களுக்கு மேலாக உலகளாவிய இளைஞர் வலுவூட்டல்தளமாக செயற்பட்டு வருகிறது. கல்வி வாய்ப்புகள், தலைமைத்துவப்பயிற்சிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம்இளைஞர்களை முன்னேற்றுவதில் இவ்வமைப்பு முக்கிய பங்குவகிக்கிறது. இந்த அமைப்பு, சமூக மற்றும் மேம்பாட்டுநடவடிக்கைகளில் இளைஞர்களின் பங்களிப்பை வளர்க்கும்அதே வேளையில், சமநிலைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும்அமைதியான சகவாழ்வை ஊக்குவிக்கும் முயற்சிகளையும்ஊக்குவிக்கிறது. WAMY அமைப்பு ஐக்கிய நாடுகளின் அரச சார்பற்றஅமைப்புகளின் (UN NGOs) உறுப்பினராகவும் உள்ளது.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.