ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை - FLASH NEWS - TAMIL


ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத்'  சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். "அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன," என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இந்த அறிக்கையுடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான "ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு" (The birth of the Trump Doctrine) என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், "அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது!’ என்று கூறினேன்" எனப் பதிவிட்டுள்ளார். 

பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு பின்னணியில், ட்ரம்பின் இந்த அறிக்கை ஈரான் விவகாரத்தில் அவர் மிகவும் கடுமையான கொள்கையைப் பின்பற்றுவதையே காட்டுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.