மனைவி, மாமியாரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் கைது
தனது மனைவி மற்றும் அவரது தாயாரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், கலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் ஜே.வி.பி (தேசிய மக்கள் சக்தி) உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக, குறித்த உறுப்பினர் தனது மனைவி மற்றும் மாமியாரைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலுக்குள்ளான மனைவியும் அவரது தாயாரும் சிகிச்சைக்காக பைரமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தற்போது மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Post a Comment