மக்களுக்கு தியாகம் செய்யச் சொல்லிவிட்டு, அமைச்சர்கள் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவதா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு. - FLASH NEWS - TAMIL


மக்களுக்கு தியாகம் செய்யச் சொல்லிவிட்டு, அமைச்சர்கள் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்துவதா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவு.


 நீங்கள் இந்த நாட்டு மக்களை மின் விளக்குகளை அனைத்து மின்சாரத்தை சேமிக்க சொன்னீர்கள், 

அரசு ஊழியர்களுக்கு எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தி, விடுமுறையே கொடுத்தீர்கள்,

அரசு நிறுவனங்களில் ஏ/சி-யை அணைத்துவிட்டு மின்விசிறியை இயக்கச் சொல்லி அறிவுரை வழங்கினீர்கள்,

கேவலம் ஆடைகளைக்கூட வாரத்திற்கு ஒரு முறையே கழுவசொல்லி கேலி பண்ணப்பட்டீர்கள்,

இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டு,

நீங்களோ, ஒரு லிட்டருக்கு வெறும் 5 கி.மீ. மட்டுமே ஓடும் ஒரு லேண்ட் க்ரூஸர் V8 காரில் நாடு முழுவதும் சுற்றி வருகிறீர்கள்.

இந்தக் V8 கார்கள் விடயத்தை நீங்கள் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கவில்லை.

முன்னைய அரச தலைவர்கள் இந்த கார்களை பயன்படுத்துவதை மிகவும் கேவலமாக விமர்சித்து, “மக்களுக்கு கிடைக்காத எதுவும் எங்களுக்கு வேண்டாம்” என்ற மகுட வாசகத்தை கூறி ஆட்சிக்கு வந்தீர்கள், அது ஒரு புறம் இருக்கட்டும்.

இப்போது பேசவில்லை, அதனை பிறகு பேசுவோம்! 

பொதுமக்களை தியாகம் செய்யுங்கள், தியாகம் செய்யுங்கள் என்று பலமுறை கேட்டுக்கொண்ட நீங்கள்,

குறைந்தபட்சம் அரசாங்க அமைச்சர்களாவது, ஏன் பெற்றோலை உறிஞ்சும் இதுபோன்ற ஆடம்பர வாகனங்களை இந்த இக்கட்டான நேரத்திலும் பயன்படுத்துகிறீர்கள்?

இது போன்ற நியாயமான கேள்விகளை மக்கள் கேட்கவில்லை என்பதற்காக நீங்கள் செய்வதெல்லாம் சரியென்று ஆகாது.

பொதுமக்களுக்குக் கிடைக்காத எந்தச் சலுகைகளையும் நாங்கள் விரும்பவில்லை என்று தேர்தலுக்கு முன்பு அனுர அடித்துக்கூறியது பொய் என்பது அப்போதே தெரியும்.

ஆனாலும் இந்த கடினமான சூழலிலும் அரசாங்கமும் அதிகாரிகளும் மக்களுக்கு முன்னுதாரணமாய் சில விடயங்களை செய்தே ஆகவேண்டும்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்

“பெட்டாவில் பொருள் வாங்கிய தலைவர்” என்றும்

 ஆட்சிக்கு வந்த காலப்பகுதியில் 

“புகையிரதத்தில் சாதாரணமாக பயணித்த அமைச்சர்”

என்றும் கூறியதைப்போல நடந்துகொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களை கேட்கவில்லை,

குறைந்தபட்சம் எரிபொருள் பிரச்சினை முடிவுக்கு வரும்வரைக்கும் நாங்கள் வாரத்தில் ஒரு தடவை வாஷிங்க் மெசின் பாவிப்பதுபோல, நீங்கள் குறைந்தபட்சம் V8 போன்ற எரிபொருளை உறிஞ்சும் வாகனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்!

குறிப்பு - இது நேற்றைய தினம் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி பயணித்த வாகனம்!


சிங்களத்தில் - மிதுன அபிசேக் தசநாயக்க பதிவிலிருந்து


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.