முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை - FLASH NEWS - TAMIL

முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறை



வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 


அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 


வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது

News Editor-2

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்