பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் - FLASH NEWS - TAMIL

பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

 

(அஸீம் கிலாப்தீன்) – நாடளாவிய ரீதியில் இன்று (27) வியாழக்கிழமை இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக கொழும்பு  தேசிய  வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

குறித்த போராட்டத்தின் போது கொழும்பு  தேசிய   வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்று வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்க கூறுகையில்,

அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையினை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை எனவும் இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும், வேறு அரச ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும். கொடுப்பனவுகள் அதிகரிக்கும் போது பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
















AZEEM MOHAMMED

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்