வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் - TID விசாரணைக்கு அழைப்பு - FLASH NEWS - TAMIL

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் - TID விசாரணைக்கு அழைப்பு


வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024 நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்