பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று - FLASH NEWS - TAMIL

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று

 




எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது.


முன்னதாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கடந்த முதலாம் திகதியும் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.


அதற்கமைய, கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் சகல காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது.


அதேநேரம், குறித்த அலுவலர்களுக்கு இன்றைய தினமும் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


அத்துடன், முதலாம் திகதியும் இன்றைய தினமும் முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிப்பதற்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, குறித்த 3 தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Fazu

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்