கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு - FLASH NEWS - TAMIL


கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (23) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான துறைகளை ஆராய்வதாக அமைந்திருந்தது.

உயர் ஸ்தானிகர் வால்ஷ், இலங்கையுடனான வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையின் சமூகப் பாதுகாப்பு முறைமையை வலுப்படுத்துதல், பெண்களின் தொழில்முயற்சியை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர  தொழில்முயற்சித் துறையின் முக்கியத்துவம் உட்பட அபிவிருத்தியின் முக்கிய பகுதிகள் குறித்து இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் முன்னேற்றத்தில், குறிப்பாக தேசத்தை ஒன்றிணைப்பதில் அனைவரையும் உள்ளடங்கியதன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். நீண்ட கால வளர்ச்சிக்கு கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி கே. குணசேகர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.