புதிய ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார் - FLASH NEWS - TAMIL

புதிய ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார்


கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார்.

தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே  நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.

பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட பார்வையாளர்  புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.  லால் காந்தவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.









News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்