சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார். - FLASH NEWS - TAMIL

சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

 


2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இலங்கை, ஹேக் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 24 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார். நாட்டின் 10 சிறந்த இளம் ஆளுமைகளில் ஒருவராகவும் அவர் பெயரிடப்பட்டிருந்தார். இந்நாட்டில் திறமையான சட்டத்தரணிகளில் ஒருவரான அவர் சட்டத்துறையில் பரந்துபட்ட அறிவைக் கொண்டுள்ளதன் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்