முதியோர் நலப் பாதுகாப்பு முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சுகாதாரச் செயலாளர் தகவல். - FLASH NEWS - TAMIL

முதியோர் நலப் பாதுகாப்பு முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சுகாதாரச் செயலாளர் தகவல்.

 

சமூகத்தில் உள்ள முதியோர் மற்றும் முதியோர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சுகாதார அமைச்சு, இலங்கையில் உள்ள JICA அலுவலகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்து JICA திட்டக்குழுவினருக்கு இன்று (20) சுகாதார அமைச்சில், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் திரு.பாலித மஹிபாலவவினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திட்டத்தின் தலைமை ஆலோசகர் திருமதி மிச்சிகோ புஜிமோடோ மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கோட்டா இவாக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் உள்ள முதியவர்கள் தரமான முதிர்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 03 வருட செயற்திட்டமானது 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலும் முன்னோடித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கடுவெல பிரதேசத்தில் அதுருகிரி மற்றும் பாதுக்க பிரதேசத்தில் பொரேகெதர மற்றும் பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேசத்தில் கந்தகெபுல்பாத மற்றும் கிவுலேகெதர ஆகிய பிரதேசங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

முதியோர்களின் தேசிய செயலகத்தின் (NSE) தரவுகளின்படி, உலகின் முதியோர்களின் எண்ணிக்கை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இலங்கையிலும் முதியோர் சனத்தொகை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், இலங்கையின் முதியோர் சனத்தொகை 9.3 ஆக இருந்ததாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2050 இல் 27.6% ஆக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.. வயோதிபர்கள் மற்றும் முதியோர்களுக்காக ஒரு வலுவான திட்டத்தை தயாரிப்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது முதியோர்களுக்கான சுகாதார சேவையை வழங்குவதன் மூலம் இலங்கையின் மூத்த பிரஜைகளுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் எனவும் சுகாதார செயலாளர் டொக்டர் பாலித மஹிபால சுட்டிக்காட்டினார்.

News Editor - Tamil

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்