அனுராதபுரத்தில் இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (11.08.2023) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆர்.டி.சஞ்சீவ என்ற 41 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். சிகை அலங்கார உரிமையாளரான குறித்த நபர், நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், வீட்டுக்குள் புகுந்து அவரைச் சுட்டுப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments :
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK