ஹம்தியின் சிறுநீரகத்தை அகற்றியவர் அவுஸ்திரேலியாவில்... - FLASH NEWS - TAMIL

ஹம்தியின் சிறுநீரகத்தை அகற்றியவர் அவுஸ்திரேலியாவில்...



மருத்துவர் நவீன் விஜேகோன் சிறுவர் மற்றும் சிறுநீரக மருத்துவ நிபுணராவார். கொழும்பு, கம்பஹா மற்றும் நீர்கொழும்பின் பிரதான தனியார் மருத்துவமனைகளில் கிளினிக்குகளை நடத்தி மாதாந்தம் இலட்சக்கணக்கான வருமானத்தைக் ஈட்டிக்கொண்டிருப்பவர். 

சிறுவன் ஹம்தியின் இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றிய சத்திரசிகிச்சையின் பின்னர் குறுகிய நாட்களுக்குள் நாட்டை விட்டு வௌியேறிவிட்டார்.

அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே கருத்தரங்குகளிலும் கலந்து கொள்வதாவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவன் ஹம்திக்கு நடந்த அநியாயங்கள் குறித்து தௌிவான ஆதாரங்களுடன் அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் அந்நாட்டின் மருத்துவக் கவுன்சிலுக்கு உரிய முறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டால் நவீன் விஜேகோன் அஸ்திரேலியாவில் இருந்தும் வௌியேற்றப்படுவார் என்பது உறுதி.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஶ்ரீலங்கா முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு தன்னுடைய நடவடிக்கையை விரைவுபடுத்தி பச்சிளம் பாலகனின் உயிரை பலியெடுத்த வைத்தியருக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.






BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்