VIDEO : பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார - FLASH NEWS - TAMIL

VIDEO : பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார


நாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் என்றும் தாக்குதல் ஒப்பந்தம் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அதற்காக கருணா 15 கோடி ரூபா கேட்டார் என்றும் புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். துஸார பீரிஸ் என்பவர் ஞானசார தேரர் அங்கம் வகிக்கும் எமது மக்கள் சக்தி என்ற கட்சியுடன் தொடர்புடையவர்.

'பிரபாகரன்' என்ற சிங்கள திரைப்படத்தை தயாரித்தவர். சில பிரச்சினைகள் காரணமாக அந்த திரைப்படம் திரையிடப்படவில்லை. இப்போது அவர் பிரான்ஸில் உள்ளார். அங்கிருந்து நாட்டின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துவதற்காகவே இப்படியான வேலையை செய்வதற்கு திட்டமிட்டாராம். இந்தக் கொலைத் திட்டத்தை சரியாக நிறைவேற்றக் கூடியவர் கருணாதான் என்பதால் துஷாரா பீரிஸ் பௌத்த தேரர் ஒருவரின் ஊடாக கருணாவை தொடர்பு கொண்டபோதுதான் 15 கோடி ரூபா கேட்டாராம் கருணா. பேரம் பேசலில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அது பெரும் தொகை என்பதால் அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் நாமல்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

إرسال تعليق

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்