தீப்பிடித்த மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் வெடித்து சிதறலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - FLASH NEWS - TAMIL


தீப்பிடித்த மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் வெடித்து சிதறலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசர கால முன்னாயத்த செயற்பாடுகள் என்ற வகையிலான அறிக்கையொன்று அம்பாறை மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2020.09.03ஆம் திகதி சங்கமன் கந்தமுனை பிரதேச கடலில் 38 மைல் தொலைவில் மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீப்பிடித்துள்ளதுடன் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை, விமானப்படை, கரையோர பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்த போதும் தீயினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. அத்துடன் கொள்கலன் கப்பல் வெடித்து சிதற கூடிய சந்தர்ப்பமும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் வெடிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.