HNDE ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை - FLASH NEWS - TAMIL


HNDE ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை

சில்மியா யூசுப்

இலங்கை உயர் நுட்ப கல்வி நிறுவனத்தில் பயின்ற ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளக் கோரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான மகரூப் 

HNDE ஆங்கில உயர் டிப்ளோமா தாரிகளை  ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள ஆவனம்் செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டிக் கொண்டார்.  

செயலாளர் ஐ கே ஜி முத்துபன்டாவை அண்மையில்  சந்தித்து திருகோணமலை மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோதே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் நீண்டகாலமாக வழங்கப் படாமை இருப்பதனால் ஆங்கில உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றோர் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து நீண்ட காலமாக கிடைக்காமல் இருக்கும்  தமக்கான நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கோரிக்கையை கல்வி அமைச்சின் செயலாளரிடம் முன் வைத்தார்,
அத்தோடு இது குறித்து தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது கல்வி அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.