GMOA உடன் கலந்துரையாட திகதி குறித்த அமைச்சர் - FLASH NEWS - TAMIL


GMOA உடன் கலந்துரையாட திகதி குறித்த அமைச்சர்


அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இது குறித்து 'Flash News இணையத்தளம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் நாளை (06) இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.