சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல் - FLASH NEWS - TAMIL


சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல்

 


சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இத்தாக்குதலின் இலக்கு CIA மையமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

இந்தத் தாக்குதலினால் தூதரகத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதோடு, உட்பகுதி புகையினால் சூழப்பட்டுள்ளதாக அந்த செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கிருக்கும் பணியாளர்களை அதே இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.