வைத்தியர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் வழங்க நடவடிக்கை - FLASH NEWS - TAMIL


வைத்தியர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் வழங்க நடவடிக்கை

 


வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 


சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

"QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் போது, பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் மற்றும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

இன்னும் ஒரு சில நாட்களுக்கு இந்த சிக்கல்கள் இருக்கும், பின்னர் அவை தீர்க்கப்படும். 

நாம் இதனை ஒரு பொதுவான சுற்றறிக்கையாகவே அறிமுகப்படுத்தியுள்ளோம். விசேடமான தொழில் பிரிவுகள் மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளன. 

அவை தொடர்பான தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியிடப்படும். 

வைத்தியர்கள் என்பவர் ஒரு விசேட தொழிலைச் சேர்ந்தவர்கள். அத்துடன் விசேட அபிவிருத்தி திட்டங்களும் உள்ளன. எனவே, ஒரு நபருக்கோ அல்லது ஒரு வாகனத்திற்கோ வழங்கப்படும் எரிபொருள் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. 

அவற்றின் விசேட தன்மையை இனங்கண்டு, அதற்கான சுற்றறிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் போது, வைத்தியர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குரிய சுற்றறிக்கைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்." என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.