ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு வரை மட்டுமே எரிபொருள் உள்ளது.. அதன் பின்னர் கடும் சவாலை எதிர்நோக்க நேரிடும் .. – பிமல்” - FLASH NEWS - TAMIL


ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு வரை மட்டுமே எரிபொருள் உள்ளது.. அதன் பின்னர் கடும் சவாலை எதிர்நோக்க நேரிடும் .. – பிமல்”



எதிர்வரும் ஏப்ரல் மாத சித்திரை புத்தாண்டு வரை மட்டுமே நாட்டில் எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், அதன் பின்னர் நாடு பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும் என்றும் திரு. பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் சிலரின் முட்டாள்தனமான யுத்த வெறி காரணமாக முழு உலகமும் அழிந்து வருவதாகவும், அதன் தாக்கம் இலங்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உலகை ஆளும் சில தலைவர்களின் யுத்த வெறியினால் மனித உயிர்கள் அழிந்து வருவதுடன், மக்களின் வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளும் தகர்ந்து போயுள்ளதாக திரு. ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். பூமியின் ஒரு சிறிய பகுதியான இலங்கையின் குடிமக்கள் என்ற ரீதியில், நாமும் இந்த மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இலங்கை செய்திகள்


நாட்டின் எரிபொருள் இருப்பு ஏப்ரல் மாத புத்தாண்டு வரை மட்டுமே இருக்கும் என ஜனாதிபதியும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்ததை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய உலகளாவிய யுத்த சூழல் தொடருமானால், அதன் பின்னர் எரிபொருள் தொடர்பில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.