எரிபொருள் விலைகள் அதிகரிப்பு - FLASH NEWS - TAMIL


எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

 


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  நேற்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. 

அதன்படி, ரூ. 317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை ரூ. 81.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 398.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 365.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 455.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 303.00 ஆக இருந்த லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 79.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 382.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 353.00 ஆக இருந்த லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீற்றரின் விலை ரூ. 90.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 443.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ரூ. 195.00 ஆக இருந்த லங்கா மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை  ரூ. 60.00 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 255.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.