புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ட்ரம்ப் அறிவிப்பு! - FLASH NEWS - TAMIL


புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ட்ரம்ப் அறிவிப்பு!

 


அயதுல்லா அலி காமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதற்குத் தான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 'த அட்லாண்டிக்' (The Atlantic) சஞ்சிகைக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ஈரான் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட அந்நாட்டின் 48 முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ளமையை அவர் சர்வதேச ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.