ஈரானில் 99% இணையச் சேவை முடக்கம் - FLASH NEWS - TAMIL


ஈரானில் 99% இணையச் சேவை முடக்கம்


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில மணிநேரங்களின் பின்னர், அந்நாட்டின் இணைய வசதிகள் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

உலகளாவிய இணையச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் 'கென்டிக்' நிறுவனத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் ஈரானின் இணையத் தொடர்புகளில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

ஈரானின் உலகளாவிய இணைய அணுகலில் சுமார் 99% தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் ஈரானிய அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற்ற நபர்களுக்குச் சொந்தமான குறிப்பிட்ட சில கணக்குகள் மட்டுமே தற்போது செயலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சர்வதேச இணையத் தொடர்புகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ள போதிலும், ஈரானுக்குள் இயங்கும் உள்ளூர் இணையத்தளங்கள் மற்றும் தகவல் பரிமாற்றக் கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.