அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஏப்ரல் 02 முதல் அமுல் - FLASH NEWS - TAMIL


அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஏப்ரல் 02 முதல் அமுல்

 


2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இடமாற்றங்கள் அமுலாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களை அரச சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, 2026 வருடாந்த இடமாற்ற உத்தரவுகளைப் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் குறித்த திகதியில் தமது புதிய சேவை நிலையங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும், அரச சேவை ஆணைக்குழுவினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பாக இனிவரும் காலங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.