ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்பம் - FLASH NEWS - TAMIL


ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்பம்


புனித ரமழான் மாதத்தையொட்டி, ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) நடைபெற்றது.

இந்த நிகழ்வு, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.

ரமழான் மாதத்தில் நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளை எளிதாக்கும் நோக்கில், நாட்டின் பல பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் மதரஸாக்களுக்கு பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எஸ்.எச்.எம். அஸ்பர் (காத்தான்குடி நகர சபை தவிசாளர்), அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) (ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் செயலாளர் நாயகம்), காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.












No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.