விமானப்படையின் 27ஆவது சைக்கிள் சவாரியின் முதலாவது சுற்று வெற்றிகரமாக நிறைவு - FLASH NEWS - TAMIL


விமானப்படையின் 27ஆவது சைக்கிள் சவாரியின் முதலாவது சுற்று வெற்றிகரமாக நிறைவு


இலங்கை விமானப்படையின் 27ஆவது சைக்கிள் சவாரியின் முதலாவது சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இலங்கை விமானப்படையின் 75 வது வருட நிறைவினை முன்னிட்டு  இலங்கை விமானப்படை சைக்கிள் சவாரி சம்மேளனத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டு 27 ஆவது விமானப்படை சைக்கிள் சவாரி நீர்கோழும்பில் இன்று 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமானது. 
 நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணித்தியாலம் மற்றும் 47 நிமிடத்தில் நிறைவு செய்து ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த முஹம்மத் அவர்கள் முதலாம் இடத்தினை பெற்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தினை இலங்கை விமானப்படையைச் சேர்ந்த வீரர்களான சமோத் டீ சில்வா மற்றும் நிதுஸ் நிரந்த  ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நாளைய தினம் இரண்டாவது சுற்றுத் தொடர் புத்தளம் இருந்து அனுராதபுரம் ஊடக தம்புள்ள வரை சுமார் ( 143 கிலோ மீட்டர் ) வரை இடம் பெற உள்ளது.









No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.