இலங்கை – சவூதி உறவு தொழில்நுட்பம், சுற்றுலா, பசுமை வலுசக்தி துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்
- சவூதி தூதரக, இப்தார், ஸ்தாபக தின நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
கொழும்பு ICT ரத்னதீப மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற சௌதி அரேபியாவின் ஸ்தாபக தின கொண்டாட்டத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இதன்போது சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சவுதி நிதியத்தின் (Saudi Fund) மூலம் இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான உதவிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவுதியில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பலம் சேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சவுதியின் ‘Vision 2030’ திட்டத்துடன் இணைந்து, இலங்கையின் புதிய அரசாங்கம் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை எதிர்பார்க்கிறது. இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு “பொற்காலம்” உருவாகி வருவதாக அமைச்சர் தனது உரையில் நம்பிக்கை வெளியிட்டார்.

Post a Comment