மகாவலி ஆற்றுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கிற்கு 'அவதான' (Amber) நிலை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் மகாவலி கங்கையின் சில நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள்:
இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட, மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் இந்த வெள்ள அபாயம் நிலவுகிறது:
• கிண்ணியா
• மூதூர்
• சேருவில
• வெலிகந்த
• லங்காபுர
• தமன்கடுவ
• திம்புலாகல
போக்குவரத்து மற்றும் வீதி அபாயங்கள்:
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல (Gallella) பகுதியிலும், சோமாவதி ரஜமகா விகாரைக்கான நுழைவு வீதியிலும், மற்றும் விகாரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ள நீர் உட்புகும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள்:
• பக்தர்களுக்கு: சோமாவதி ரஜமகா விகாரைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்கள், மறு அறிவித்தல் வரும் வரை எதிர்வரும் சில தினங்களுக்கு அப்பகுதிக்குச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
• பொதுமக்களுக்கு: மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் மகாவலி கங்கைக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment