கடந்த 24 மணித்தியாலங்களில் 549 பேர் கைது - FLASH NEWS - TAMIL


கடந்த 24 மணித்தியாலங்களில் 549 பேர் கைது


பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த ஒரு நாளில் மாத்திரம் 549 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கைகளின் போது 29,608 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கு மேலதிகமாக, இந்த நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 519 பேரும், மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய 309 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,392 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.