கமாண்டோ சலிந்த அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் - FLASH NEWS - TAMIL


கமாண்டோ சலிந்த அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

 


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் எனக் கூறப்படும் 'கமாண்டோ சலிந்த' என்பவரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கமாண்டோ சலிந்த என்பவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,. கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறைக்குள் இன்று (27) ஆஜர்ப்படுத்தினர். 

இதன்போது, விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தனர். 

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.