மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் - FLASH NEWS - TAMIL


மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல்

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


கடற் கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு தலைவரும் அரசியலைமைப்பு பேரவையின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஏற்பாட்டில் இன்று (19) திங்கட்கிழமை பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.




இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர் உட்பட மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் தங்களது காத்திரமான கருத்துக்களையும் இதன் போது முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.