ஆழ்கடல் மீனவர் கடல் கொள்ளை: மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் கடற்றொழில் அமைச்சர் உறுதி - FLASH NEWS - TAMIL

ஆழ்கடல் மீனவர் கடல் கொள்ளை: மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் கடற்றொழில் அமைச்சர் உறுதி

 



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் மற்றும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான ஏ. ஆதம்பாவா, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர ஆகியோரைச் சந்தித்து கையளித்து அது தொடர்பாக நேற்று (21) புதன்கிழமை கலந்துரையாடினார்.


இச்சந்திப்பின் போது அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் என்றும் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.


இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவும் கலந்து சிறப்பித்தார்.

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்