இம்மடல் தென்கிழக்கு வாசலில் இருந்து வரையப்படுகிறது.

உங்கள் அழகிய முற்றத்திலிருந்து ஓர் இளமையில் அனுபவம், முகாமைத்துவ பட்டதாரி, சமூக சேவகன், தொழிலதிபர், பல்லின சமூகத்துக்குள் சராசரி மனிதனாய், தலைமைத்துவ பன்புகளோடு தாரிக் என்றொருவர் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாராமே என்று சமூகவலைத்தளங்களில் கானக்கிடைத்தது.

உங்கள் ஊரினை நான் கண்டது கிடையாது ஆனால் இப்படி ஒரு வேட்பாளரின் வருகையினால் அவ்வூரினைப்பற்றி அலசுகிறேன்.

சரி, சுருக்கமாக விடயத்துக்கு வருகிறேன்.உங்கள் மாவட்டம் கிழக்கைப் போன்று அரசியல் முதிர்ச்சியோ, ஈடுபாடோ மிக மிகக் குறைவே, அவ்வாறான கள நிலவரம் இருக்கையில் ஏன் இவர் வேட்பாளராக முன்வந்தார்.

அதை விவரிக்க நேரமில்லை, உங்கள் பக்கம் என் கழுகுப் பார்வையை செலுத்துகிறேன்.

அது முற்றத்து மல்லிகை ஏன் எதற்கு என்ற வாதத்திற்கு நேரமில்லை. "அதன் வெற்றியில் முதலில் கைகோர்த்த, சவால்களை எதிர்கொண்ட, தயக்கமின்றி வெற்றி நோக்கிப்புறப்பட்ட ஒருவன் நான்" எனும் வேட்கையோடு புறப்படுங்கள் இன்ஷாஅல்லாஹ் 14ம் திகதி அதன் வெற்றி  வாடகை ஒவ்வொரு உள்ளத்தை உருக்கி ஆனந்தககண்ணீராய் சொட்டும்!.

அன்பர்களே இறுதயாக ஓர் அன்பான வேண்டுகோள் நாச்சியாதீவு வரலாற்றில் வரலாற்றுத் தவறினை இழைத்து விடாதீர்கள்.

அரசியல் அதிகாரமும்,சமூகசேவகனும் எனும் அந்நற்பெயருக்கு பூட்டுப் போட்டு விடாதீர்கள்.

தள்ளி நிற்பவரை திட்டாதீர்கள், தாராளமாய் தட்டி அணையிங்கள், சமத்துவமாய், சமூகமாய் சாதித்துக் காட்டுங்கள்.

என் கிழக்குப் பார்வை உம் முற்றத்து மல்லிகையின் வெற்றியை நோக்கி நகர்த்தப்படுகிறது.

நன்றி

F.மனால்.F