முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை தடைகான் பெறுபேறுகள் இடைநிறுத்தம்; - FLASH NEWS - TAMIL


முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை தடைகான் பெறுபேறுகள் இடைநிறுத்தம்;


 திருமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை உறுதியளித்தபடி வெளியிட்டமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அதேபோன்று, 13 முஸ்லிம் அதிபர்களின் வினைத்திறமை தடைகாண் பரீட்சை பெறுபேறுகளையும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்  போது, ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்த ரிஷாட் எம்.பி, மேலும் கூறியதாவது

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நான் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்தவகையில், அவர் ஒரு இனவாதி அல்ல. இன, மத பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்துபவர்.

எனவே, கல்வித் திணைக்களம் மற்றும் பரீட்சை திணைக்களம் ஆகியவற்றில் இடம்பெறும் குளறுபடியான நடவடிக்கைகளுக்கும் பாரபட்சமான அணுகுமுறைகளுக்கும் சில அதிகாரிகளே காரணம் என்பதை என்னால் கூற முடியும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்காக சுற்றுநிருபம் ஒன்றை உடனடியாக வெளியிடுவது சிறந்ததாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.  

இதற்கு உடனே பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில், நிலைமையை ஆராய்ந்து, அதிபர்களின் பரீட்சை பெறுபேறுகளை ஒரு வாரத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டிடம் உறுதியளித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.