வைத்தியர் சப்ரினா பேகம் ,வைத்தியர் முஹம்மட் நிஸார் நிகாத் ஷெரீன்  

குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் (MD /Paediatrics )கற்கை நெறிக்கு போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு 

அநுராதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஹமீது இலியாஸ் ,ஓய்வு பெற்ற ஆசிரியை ஆப்தீன் சித்தி பஷீரா உம்மா தம்பதிகளின் புதல்வி வைத்தியர் சப்ரினா பேகம் (முஹம்மத் ஹனீபா முஹம்மது ஹம்ஸீன் என்பவரது மனைவி) , அநுராதபுரத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியரும்,ஷெரின் கோல்ட் ஹவுஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் ஆப்தீன் மொஹமட் நிசார் ,ஓய்வு பெற்ற ஆசிரியை ஹாஜியானி செய்யது ஹுசைன் பெளசியா தம்பதிகளின் புதல்வி வைத்தியர் முஹம்மட் நிஸார் நிகாத் ஷெரீன் (Eng சஹீட் காமில் பர்ஷாட் எனன்பவரது மனைவி) இவர்கள் இருவரும் அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்று வைத்திய பீடத்துக்கு தெரிவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது இருவரும் அண்ணன்(அல்ஹாஜ் ஆப்தீன் மொஹமட் நிசார்) ,தங்கை(ஆப்தீன் சித்தி பஷீரா உம்மா)ஆகியோரின் பிள்ளைகள் என்பதும் இங்கு விசேடமாக சுட்டிக் காட்டத்தக்க விடயமாகும்