அநுராதபுர வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ


Advertisement

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது.தீயை அணைக்க அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது




Comments