“தர்மம் தவறாத ஊடகப்பணிகளை முன்னெடுத்த சிறந்த முன்மாதிரி பி.எம்.ஏ.காதர்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!
நாடறிந்த ஊடகவியலாளரும் நல்லுள்ளம் கொண்டவருமான பி.எம்.ஏ.காதரின் மரணச் செய்திகேட்டு கடுங்கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்களின் பிரச்சினைகள், சமூகத்தின் சவால்களை தைரியமாக எழுதி தீர்வுகாண முயற்சித்த இவரது பணிகளை நான் பாராட்டுவேன். மருதமுனைக்கு கடந்த வாரம் சென்றிருந்தபோது, அவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்து, அவரது இல்லத்துக்குச் சென்று நலம் விசாரித்தேன். அப்போது எனது கையை இறுகப்பற்றிக்கொண்டார். அடிக்கடி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுவார்.
Advertisement - செந்தீ குறும்படம் | Senthi Short Film
சமூக அரசியலுக்கான அரசியலில் எந்தப்பாதை செல்வதென்ற தெளிவும் மர்ஹூம் காதரிடமிருந்தது. உணர்ச்சி அரசியலின்றி யதார்த்த வழிமுறைகள்தான் நடப்பு சவால்களுக்கு தீர்வென்ற தெளிவும் இவரிடமிருந்தது.
இறைவனின் தவணை நெருங்கியதால் அவர் எம்மைவிட்டுச் சென்றுவிட்டார். அன்னாரது நல்ல பணிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக..! அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு பொறுமையை வழங்குவானாக..! ஆமீன்...!”




Post a Comment