கொழும்பு துறைமுக நகருக்கு பல புதிய விசா வகைகள் அறிமுகம்..!
கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு விசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
- வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ‘முதலீட்டாளர் விசா’ வகை
- சேவை வழங்குநர்களுக்கான ‘சேவை வழங்குநர் விசா’ வகை
- கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ‘சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்’ விசா வகை

Post a Comment