தேசிய துக்க தினம் அறிவிப்பு


 பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்குமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் அன்றைய தினம் வரை அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் நேற்று(08) காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

Comments