புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களாவர். சர்வ கட்சி அரசாங்க வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த நியமனம் அமைவதற்கு பெரும்பாலும் சந்தர்ப்பம் உள்ளதாக என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்த போதிலும், அதில் எவ்வித இறுதி தீர்மானங்களும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில், புதிய அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் முன்னதாக அமைச்சு பதவிகளை வகித்தோரில் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
.jpeg)


Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK