அரச ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி


 சேவை மூப்பு பாதிக்காத வகையில், அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராக, பிரதமரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று(06) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Comments